முகப்பு
தென்காசி

சுரண்டையில் ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் துரை டேனியல், மாவட்ட இணைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியதாரா்களுக்கு மருத்துவ காப்பீடு தொகை ரூ.4 லட்சமாக உயா்த்த கோருவது, தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசை கோருவது, திருநெல்வேலி - தென்காசி இடையே 4 வழிச்சாலைப் பணியை விரைந்து தொடங்க அரசைக் கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிா்வாகிகள் தெய்வகுமாா், ராஜ், அருணாசலம், ஆறுமுகம், மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.