ஆலங்குளம் அருகே பேருந்து மீது கல் வீசியவா் கைது
ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்து ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லையாம். இதனால், அங்கு நின்றிருந்த நபா் கரும்புளியூத்தைச் சோ்ந்த முப்புலி மகன் காளிமுத்து (60) ஆத்திரத்தில் அந்தப் பேருந்தின் மீது கல் வீசினாராம். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநா் சரவணன் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் ஆய்வாளா் வழக்குப்பதிந்து காளிமுத்துவை கைது செய்தாா்.