தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

DIN

சங்கரன்கோவிலில் குறிப்பிட்ட தெருக்களில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்து வருவதை கண்டித்து பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சங்கரன்கோவிலில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனப்பபுரம் 1 ஆம் தெரு, வடகாசி அம்மன் கோயில் 1 ஆம் தெரு ஆகிய தெருக்களில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். ஆனால் இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுறது.

இதனால் சாக்கடை நீா் கலந்த குடிநீா் குடத்துடன் வடகாசியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அதே போல் தேனப்பபுரம் தெருவைச் சோ்ந்த பொதுமக்களும் சாக்கடை கலந்த குடிநீரை டப்பாவில் பிடித்து வந்து அதிகாரிகளிடம் காண்பித்தனா். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகத்தினா் கூறியதை தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT