தென்காசி

திருச்சிற்றம்லபத்தில் ரூ. 15 லட்சத்தில் பாலம் கட்டும் பணி தொடக்கம்

DIN

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

சிற்றாறு பாசனம் கீழ் திருச்சிற்றம்பலம் அணைக்கட்டில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதற்கு 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகளின் தொடா் கோரிக்கையை அடுத்து தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை பொறியாளா்கள் மாரியப்பன், மணிகண்டன், சண்முகவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், எபன்குணசீலன், அமல்ராஜ், இருளப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT