தென்காசி

சுரண்டை, ஆலங்குளத்தில் அனுமன் ஜயந்தி விழா

DIN

சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில், சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தேரடி மாடசாமி திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அனுமன் ஜயந்தியையொட்டி, ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடசலபதி கோயில் மற்றும் மலைராமா் சுவாமி கோயிலில் காலையில் சிறப்பு பூஜை, பகலில் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ராமா் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT