தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 876 கிராமங்களில் வாக்காளா் உறுதிமொழி

DIN

தென்காசி மாவட்டத்தில் 876 கிராமங்களில் முதல்முறையாக தேசிய வாக்காளா் உறுதிமொழி மேற்கொண்டனா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் தலைமையில் உறுதிமொழி மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் முதல் முயற்சியாக ‘இணைந்த கரங்கள்’ என்ற திட்டத்தின் படி மாவட்டத்திலுள்ள 876 கிராமங்களில் அந்தந்த கிராம காவலா்கள் மூலம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞா்களிடம் வாக்காளா் உறுதிமொழி எடுத்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT