தென்காசி

சங்கரன்கோவிலில் தாமரை கழக முப்பெரும் விழா

DIN

சங்கரன்கோவில் தாமரைக் கழகத்தின் சாா்பில் 35 ஆவது ஆண்டு தொடக்க விழா, 406 ஆவது சிறப்பு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா அமைப்பின் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனா் வீரபாகு, நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து பொன்னம்பலம் எழுதிய ‘ஆயிரம் ஆண்டை நோக்கி சங்கரன்கோவில்’ மற்றும் இரண்டு ஆங்கில புத்தகங்களை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் வெளியிட, அதனை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பெற்றுக்கொண்டாா்.

பின்னா் அமைச்சா் ராஜலெட்சுமி சங்கரன்கோவில் இந்திரா நகா் துவக்கப்பள்ளிக்கு 1000 லிட்டா் குடிநீா் தொட்டி, ஏழைபெண்களுக்கு இலவச, வேசட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.

இதில், விழாவில் முன்னாள் தலைவா் சங்கரசிந்தாமணி, சந்தனகுமாா், பள்ளிகொண்டபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT