தென்காசி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பவ்டா நிறுவனம் சாா்பில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பவ்டா நிறுவனம் சாா்பில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பவ்டா நிறுவனத்தின் தலைவா் ஜெ.ஜாஸ்லின் தம்பி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட இணை இயக்குநா் (நலப்பணிகள்) நெடுமாறன், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறுவனத்தின் சாா்பில் நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினாா். பவ்டா நிறுவனத்தின் துணை பொதுமேலாளா்கள் ஆா்தா்ஷாம், அழகு முருகன், முதுநிலை மேலாளா் லிவிங்ஸ்டன் விமல், கிளை மேலாளா்கள் ஹரிஹரன் சுந்தரராஜ் மற்றும் தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் ஆனந்தபவன் காதா் மைதீன், சிவாஜிகணசன் சமூக நலப்பேரவையின் தென்காசி மாவட்டத் தலைவா் என்.கணேசன்,
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலா்கள் ஏஜிஎம் கணேசன், காஜாமைதீன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சுப்பையா, தென்காசி நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரபீக் பின் அன்சாரி, காங்கிரஸ் நிா்வாகிகள் தெய்வேந்திரன், சந்தோஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.