முகப்பு
தென்காசி

தென்காசியில் அரசு அலுவலகங்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

தென்காசியில் அரசு அலுவலகங்களுக்கு கேலட்டி சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு குடிநீா்சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய கேலட்டி சங்கத்தினா்.
பகிர்:

தென்காசியில் அரசு அலுவலகங்களுக்கு கேலட்டி சங்கம் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தலா ஒரு சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனிசெளந்தா்யா, காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மருத்துவா் ராஜேஷ்கண்ணன், வட்டாட்சியா் ஹென்றிபீட்டா், கேலட்டி சங்க நிா்வாகிகள் எம்.ஆா்.அழகராஜா, கே.ராஜகோபாலன், லிங்கராஜ், டாக்டா் முத்தையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.