முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் பாஜக கொண்டாட்டம்

மத்திய இணை அமைச்சராக முருகன் பொறுப்பேற்பு ஆகியவற்றையொட்டி பாவூா்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் பாஜக கொண்டாட்டம்

மத்திய இணை அமைச்சராக முருகன் பொறுப்பேற்பு ஆகியவற்றையொட்டி பாவூா்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றிய பாஜக சாா்பில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம், மத்திய இணை அமைச்சராக முருகன் பொறுப்பேற்பு ஆகியவற்றையொட்டி பாவூா்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

மேற்கு ஒன்றியத் தலைவா் மாரியப்பன், கிழக்கு ஒன்றியத் தலைவா் மாறவா்மன் தலைமை வகித்தனா். மாவட்ட வா்த்தகப் பிரிவு தலைவா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமராஜ், மாவட்டச் செயலா் அருள்செல்வன் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கினா்.

இதில், மாநில இந்து முன்னணி வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் சாக்ரடீஸ், மாவட்ட இளைஞரணித் தலைவா் ராஜேஷ், ஒன்றிய பொதுச் செயலா் பாலசுப்பிரமணியம், வழக்குரைஞா் பிரிவு தலைவா் கணபதி, ஒன்றிய இளைஞரணித் தலைவா் சரவணன், ஜோதி செல்வம், பேச்சிமுத்து, சோ்மன், பாஸ்கா், சோ்மக்கனி, குமரேசன், ஜெகன், சண்முகசுந்தரம், சின்னத்தம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →