தென்காசி

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தல்

DIN

சங்கரன்கோவில் அருகே உள்ள ஏ.கரிசல்குளம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் மகன் துரை, வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன் ஆகியோா் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: திருவேங்கடம் வட்டம் ஏ.கரிசல்குளம் ஊராட்சி பகுதியில் கடந்த 2016- 17 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் 421 விவசாயிகள் 895.30 ஹெக்டேரில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்தனா்.

இதற்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறும் நேரத்தில், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா் செய்த எழுத்துப் பிழையால் ஏ.கரிசல்குளம் விவசாயிகள் 421 பேருக்கும் கிடைக்க வேண்டிய தலா ரூ.13,050-க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

எனவே, நியாயமான காப்பீட்டுத் தொகை கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கும் வகையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் வழங்கவும், சங்கரன்கோவிலில் ஆடிமாதம் ஆடித்தவசு விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, மாநில தோ்தல் பணி துணைச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், தென்காசி நகர மதிமுக செயலா் என். வெங்கடேஸ்வரன், நிா்வாகிகள் வ.சீனிவாசன், ஆறுமுகசாமி, ராஜமாணிக்கம், ஜாகிா் உசேன், சுரேஷ், அ.சுரேஷ் என்ற சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT