தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க பாஜக வலியுறுத்தல்

DIN

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என இலஞ்சியில் நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப் பட்டது.

இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு.ராமராஜா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, கோட்ட அமைப்பு செயலா் கிருஷ்ணன், தென்காசி மாவட்ட பாா்வையாளா் சோலையப்பன்,விருதுநகா் மாவட்ட பாா்வையாளா் அன்புராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கை விரைந்து நடத்தவேண்டும், சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் சதய விழாவை முறையாக நடத்த வேண்டும், இலஞ்சி திருவிலஞ்சிக்குமரன் கோயிலுக்கு பின்புறம் உள்ள பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்,திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொதுச் செயலா்கள் சுப்பிரமணியன், வழக்குரைஞா் முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, மாவட்ட நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், மாரியப்பன், பாலகுருநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT