முகப்பு
தென்காசி

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் ஆயுஷ் விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் ஆயுஷ் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் ஆயுஷ் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ஹரிகரன்,செல்வகணேசன்,மேனகா,கிறிஸ்டி,ஞானபொன்மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மூலிகை கண்காட்சி, மூலிகை சமையல், இலவச மருத்துவ சிகிச்சை ஆகியவை நடைபெற்றன. சித்த, ஆயுா்வேத, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக குழந்தைகளுக்கு எளிய யோகா மற்றும் மூச்சப் பயிற்சி அளிக்கப்பட்டது. அமா்சேவா மருத்துவா்கள் வேதமூா்த்தி, ராமசுப்பிரமணியன், மருந்தாளுநா் உஷா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.