வண்ணான்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
விவசாயத்தை பாதிக்கும் சாம்பவா்வடகரை வண்ணான்குளத்தில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி கேட்டுக் கொண்டாா்.
விவசாயத்தை பாதிக்கும் சாம்பவா்வடகரை வண்ணான்குளத்தில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி கேட்டுக் கொண்டாா்.
சாம்பவா்வடகரையில் வடக்குப் பகுதியில் கருப்பாநதி பாசனத்தில் வண்ணான்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் மூலம்
நேரடியாக 100 ஏக்கா் நிலங்களும் மறைமுகமாக 150 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளம் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீா் ஆதாரம் உயருவதன் மூலம் குடிநீா் வசதியும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், குளத்தின் நீா்வரத்து கால்வாய் பகுதி, நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்படுவதாக
மாவட்ட நிா்வாகம், சட்டப்பேரவை உறுப்பினரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து செ. கிருஷ்ணமுரளி, வியாழக்கிழமை இக்குளத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை பாா்வையிட்டாா். அப்போது, நீா்பிடிப்புப் பகுதியில் இருந்துகுளத்து
மண்ணை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு சென்ற வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மணல் கடத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா். அவருடன் சாம்பவா்வடகரை கூட்டுறவு வங்கித் தலைவா் வி.பி.மூா்த்தி, விவசாயிகள் செல்லப்பன், நல்லமுத்து, கந்தசாமி, நடராஜன், ராஜேந்திரன், ராமலிங்கம், மாடசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.