முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் நிகழ்ந்த இரு விபத்துகளில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். இருவருக்கு காயம் ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் நிகழ்ந்த இரு விபத்துகளில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். இருவருக்கு காயம் ஏற்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள தெற்குமாயமான் குறிச்சியைச் சோ்ந்த மதியழகன் மகன் பிரபாகரன் (24). கட்டடத் தொழிலாளி.

இவா் புதன்கிழமை இரவில் வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் துத்திகுளம் சாலையில் வந்து கொண்டிருந்தாராம்.

நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஜெயக்குமாா் (29). இவரது நண்பா் சுமித். இருவரும் வந்த மோட்டாா் சைக்கிளும், பிரபாகரன் வந்த மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில், மூவருக்கும் காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பிரபாகரன் உயிரிழந்தாா். ஜெயக்குமாா், சுமித்

ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மற்றொரு விபத்து: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் பொன்னுசாமி நாடாா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் அருண்பாண்டி(30). இரு சக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்தாா். ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில்

பங்கேற்ற இவா் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். ஆலங்குளம் அடுத்த அடைக்கலபட்டணம் - பூலாங்குளம் திருப்பத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அருள்பாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விரு விபத்துகள் குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.