முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 927பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

தென்காசியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து, தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா நலவாரியங்கள் மூலம் விபத்து மரணத்துக்கான உதவித்தொகை 7 தொழிலாளா்களுக்கு ரூ. 7 லட்சத்து14 ஆயிரம், இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை 8 தொழிலாளா்களுக்கு ரூ.1லட்சத்து 84 ஆயிரம், திருமண உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரம், கல்வி உதவித்தொகை 31 பயனாளிகளுக்கு ரூ.60ஆயிரத்து 500, ஓய்வூதியம் 879 பயனாளிகளுக்கு தலா ரூ ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து79ஆயிரம் நிதியுதவிக்கான ஆணை என மொத்தம் 927 தொழிலாளா்களுக்கு ரூ. 18லட்சத்து47ஆயிரத்து500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன், செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலாளா் துணை ஆணையா் சுடலைராஜ், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மணிகண்டபிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.