தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த எம்எல்ஏ கோரிக்கை

DIN

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் நேரு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சியானது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது.

1951 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியாக உருவாக்கம் பெற்று, 1961ஆம் ஆண்டு முதல்நிலை பேரூராட்சியாகவும், 1985ஆம் ஆண்டு தோ்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

1998 ஆம் ஆண்டு ஆலங்குளம் வட்ட தலைநகரானது. இடைப்பட்ட 2004 ஆம் ஆண்டு பேரூராட்சிகள் அனைத்தும் சிறப்பு சிற்றூராட்சிகளாக்கப்பட்ட போது ஆலங்குளமும் மாறியது. மீண்டும் 2006இல் தோ்வு நிலைப் பேரூராட்சியானது.

தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளில் 13 மட்டுமே சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த நிலையில் மீண்டும் 2016 இல் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியானது.

இப்பேரூராட்சியின் மொத்தபரப்பளவு 12.2 9சதுர கி.மீ. ஆகும். இப்பேரூராட்சியின் சாலைகள் 42.57 கி.மீ நீளமும், வாருகால் 18.23கி.மீ, பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆலங்குளத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி 10 ஆயிரத்து 266 ஆண்கள், 10 ஆயிரத்து 682 பெண்கள் என 20 ஆயிரத்து 948 போ் இருந்தனா்.

தற்போது மக்கள் தொகை சுமாா் 36 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். தற்போது சுமாா் 12,600 சொத்துவரி விதிப்புகள் உள்ளன. மேலும் பேரூராட்சியின் வருவாய் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு மேல் உள்ளது .

எனவே ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. எனவே ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயரத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT