தென்காசி

திப்பணம்பட்டி பள்ளிக்கு புதிய இடம் கோரிக்கை ஏற்பு

DIN

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய இடம் குறித்த கோரிக்கை உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டி- வினைதீா்த்தநாடாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இடநெருக்கடி காரணமாக இப்பள்ளியை, திப்பணம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இடத்துக்கு மாற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதியினா், திப்பணம்பட்டியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மனு அளித்தனா்.

இந்நிலையில், அந்த மனு ‘உங்கள் தொகுதியில் முதலைமைச்சா்’ திட்டத்தில் ஏற்கப்பட்டதாக அரசு சாா்பில் பதில் வந்துள்ளது. இதனிடையே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தும் வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதனிடம் திப்பணம்பட்டி கிராம மக்கள் இது தொடா்பான மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT