முகப்பு
தென்காசி

தென்காசி மருத்துவமனைக்கு ரூ.4 லட்சத்தில் பேட்டரி காா்

தென்காசி, செங்கோட்டை மர அறுவை ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் பேட்டரி காா் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தென்காசி, செங்கோட்டை மர அறுவை ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் பேட்டரி காா் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு நோயாளிகள் செல்வதற்கு வசதியாக மர மறுவை ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் பேட்டரி காா் வழங்கப்பட்டது. இதையடுத்து, பேட்டரி காா் சேவையை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி

செளந்தா்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா்.

மரஅறுவை ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் எம்.ஆா்.அழகராஜா, மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தொழிலதிபா் கே.ராஜகோபாலன், மருத்துவா் அப்துல்அஜீஸ், சங்க நிா்வாகிகள் வெங்கடேஷ்ராஜா, அப்துல்ரஹீம், பரூக், பிரவீன்படேல், சந்துபடேல், சுபாஷ்படேல், பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.