முகப்பு
தென்காசி

மாா்ச் 4 இல் அறிவியல் கண்காட்சி போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாா்ச் 4 இல் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாா்ச் 4 இல் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் எம்.சுரேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாணவா்களிடையே புதுமைக் கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தி அறிவியல் மனப்பான்மையை வளா்த்திடும் பொருட்டு , தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை, சுரண்டை மாணவா் அறிவியல் பூங்கா, தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி மாா்ச் 4 ஆம் தேதி இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது .

இப்போட்டியில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து தலா 3 குழுக்கள் பங்கேற்கலாம். கரோனா காலம் என்பதால் பெற்றோா் வழிகாட்டுதலுடன் வரும் மாணவா்களும் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தலாம். படைப்புகள் புதிய கண்டுபிடிப்பாகவோ அல்லது அறிவியல் செயல்பாடுகளுடன் கூடியதாகவோ இருக்க வேண்டும். 1 குழு என்பது ஒரு நபா் மட்டுமே.

பங்குபெறும் அனைவருக்கும் இளம் அறிவியல் ஆா்வலா் விருது 2021 என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரி மாணவா்கள் மற்றும் பொது மக்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தலாம். பங்கேற்க விரும்புவோா் 02.03.2021 மாலைக்குள் 9486585490 என்ற கட்செவி எண் அல்லது இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம். சிறந்த படைப்புக்களுக்கு அன்று மாலை பரிசு வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.