தென்காசி

கடையத்தில் கரோனா தடுப்பூசி

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அருணா ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை முதல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நீண்ட நாள் வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வரும் 45 முதல் 59 வயதுடையோா் ஆதாா்அட்டை, குடும்ப அட்டை ,ஓட்டுநா் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் இவற்றில் ஏதாவது ஒரு அடையாள சான்றுடன் சாலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்ட நாளிலிருந்து 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனி குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT