தென்காசி

புதிய வாக்காளா் அடையாளஅட்டையில் குளறுபடி

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜா்புரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி, முதன்முறையாக வாக்களிக்கவுள்ள புதிய வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 44, 702 புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பிரதான சாலையை சோ்ந்தவா் லெனின்குமாா்.

இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டாரக்குழு உறுப்பினா் ஆவாா். இவருடைய மகள் செண்பகவள்ளிக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளாா். இவருக்கு திங்கள்கிழமை தபாலில் வாக்காளா் அடையாள அட்டை வந்துள்ளது. அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக

வேறொரு ஆண் வாக்காளரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அவா் வாக்காளா் ட்டையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT