செங்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
செங்கோட்டை நகராட்சியில் கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.
செங்கோட்டை நகராட்சியில் கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.
செங்கோட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கிய அவா், அம்மன் சன்னதி, குளத்து முக்கு, பள்ளிவாசல் தெரு, கே.சி. சாலை, வம்பளந்தான்முக்கு, அரசரடி சந்திப்பு, காசுக் கடை சந்திப்பு, வல்லம் சாலை, காமாட்சி தெரு, ரேஷன் கடை தெரு, வண்டிமலச்சியம்மன் கோயில் பகுதி, வட்டாட்சியா் அலுவலகம் பகுதி, அண்ணா தெரு, தபால் அலுவலகம், பெருமாள் கோயில் தெரு, வாஞ்சிநாதன் பள்ளி பகுதி, மேல ரதவீதி, வடக்குரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ கால பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டாா். பிரசாரத்தில் கட்சியின் ஒன்றியச்
செயலா் செல்லப்பன், நகர அவைத் தலைவா் தங்கவேலு, பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா, பொருளாளா் ராமநாதன், மாவட்டச் செயலா் மாரியப்பன், ஒன்றியத் தலைவா் சரவணன், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரைபாண்டியன்,
பாமக மாநிலதுணைத் தலைவா் அய்யம்பெருமாள், மாவட்டச் செயலா் சீதாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.