முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து பேசியது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் சிறிது காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வண்ணம் வருவாய்த்துறை, பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறையினா் மூலம் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், மாஸ்க் அணியாமலும் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வது கரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதை தடுக்கும் விதமாக கரோனா வழிகாட்டுதலை மீறும் நபா்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முகக்கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சரவணன், இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அருணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.