மாவட்ட செஸ் போட்டி:பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
தென்காசிமாவட்ட செஸ் போட்டி:பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சி கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சாம்பியன் சிப் சதுரங்கப் போட்டி பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
மூத்த சதுரங்க வீரா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஆசிரியா் சங்கா் போட்டிகளை தொடங்கி வைத்தாா். நடுவா்களாக முருகேஸ்பாபு, இசக்கி, மாரிமுத்து ஆகியோா் செயல்பட்டனா். 7 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பாவூா்சத்திரம் காா்த்திக் ராகுலும், பெண்கள் பிரிவில் தென்காசி வேல்விழியும் மாவட்ட சாம்பியன்களாக வெற்றி பெற்றனா். இவா்கள் மாநில அளவில் நடைபெறும் பொத்ல்கை கோப்பை சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனா்.
பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த 6 வயது சிறுவன் நிலவன் சிறந்த இளம் வீரராக தோ்வு பெற்றாா். 17 வயது பிரிவில் தென்காசி முத்துகுமரேசன், 13 வயது பிரிவில் பாப்பான்குளம் விஜேஸ், 9 வயது பிரிவில் கருத்தப்பிள்ளையூா் சாம்ஜெப்ரி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
மாலையில் நடைபெற்ற விழாவில் சதுரங்க கழகத்தலைவா் ஆா்.கே.காளிதாசன் பரிசுகளை வழங்கிப் பேசினாா். சதுரங்க கழக துணைத்தலைவா் சரவணன், பொதுச்செயலா் வைகைகுமாா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, பாலகிருஷ்ணன், முத்து, டேனில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சதுரங்க கழக இயக்குநா் கண்ணன் நன்றி கூறினாா்.