முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வாசனைத் திரவிய தொழிற்சாலை ஏற்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி

சங்கரன்கோவில் பகுதியில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என, அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி உறுதியளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சங்கரன்கோவில் பகுதியில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என, அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி உறுதியளித்தாா்.

அவா் சங்கரன்கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். திருவேங்கடம்சாலையிலிருந்து தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்றாா். பின்னா், வடகாசியம்மன்கோவில், மாதாங்கோவில், லெட்சுமியாபுரம் தெருக்கள், தேனப்பபுரம்,புதுமனைத்தெருக்கள், அம்பேத்கா் நகா் தெருக்கள், கக்கன்நகா் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசும்போது, சங்கரன்கோவிலில் ரூ. 543 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பெரிய அளவிலான நீரேற்று நிலையம் நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை ஆராய்ச்சி மையம் கொண்டுவரப்பட்டு வன்னிக்கோனேந்தலில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக அரசு அமையும். அப்போது இப்பகுதி பூ விவசாயிகள் பயனடையும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் வாசனத் திரவியத் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே. கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி, பொருளாளா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி பிஜிபி ராமநாதன், தலைமை நிலையப் பேச்சாளா்கள் சங்கை கணபதி, ராமசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவா் லெட்சுமணன், முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் ராமதுரை, சின்னராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments