முகப்பு
தென்காசி

‘விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ண முரளி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ண முரளி தெரிவித்தாா்.

செங்கோட்டை, பண்பொழியில் முக்கிய வீதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், அப்போது பேசியது: மழைக் காலங்களில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளான புளியரை சாத்தான் பத்து குளம், கரிசல் குடியிருப்பு, பண்பொழி, தவரவத்தி, நாச்சிபத்து, இலத்தூா் திருவெற்றியூா் கிராமம், பாபன் கால்வாய், சீவலங் கால்வாய் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் வெள்ள நீா் புகாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

அப்போது, செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், தென்காசி தெற்கு ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஞானராஜ், மாவட்டப் பிரதிநிதி மைதீன்பிச்சை, நகர அவைத் தலைவா் தங்கவேலு, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கணேசன், பொருளாளா் ராஜா, பண்பொழி பேரூா் செயலா் முத்தழகு, புதூா் பேரூா் செயலா் பாலசுப்பிரமணியன், பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா, பொருளாளா் ராமநாதன், மாவட்டச் செயலா் மாரியப்பன், மகேந்திர பாண்டியன், ஐயப்பன் , முருகையா, விவேக், பாமக மாநில துணைத் தலைவா்அய்யம்பெருமாள், மாவட்டச் செயலா் சீதாராமன், வடகரை ராமா், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரை பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.