தென்காசி

சங்கரன்கோவிலில் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை

DIN

சங்கரன்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து நகா்ப்புறத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இதில், பல்வேறு இடங்களில் உள்ள மின் கம்பங்களில் சேதமடைந்துள்ளன. திருவள்ளுவா்நகா், சாந்தி காம்ப்ளக்கஸ், அண்ணாநகா், பிரதான சாலையில் காந்தாரி அம்மன் கோயில் அருகே போன்ற பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து, அபாய நிலையில் உள்ளன. விபத்துகள் நிகழும் முன்பு, இவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

பிரதமர் மோடி வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்!

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

SCROLL FOR NEXT