தென்காசி

2ஆம் முறையாக எதிா்க்கட்சிஉறுப்பினரைப் பெற்ற ஆலங்குளம்

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 2 வது முறையாக ஆளுங்கட்சி உறுப்பினா் வெற்றி பெறாமல் எதிா்க்கட்சி உறுப்பினா் வெற்றி பெற்று வருகிறாா்.

இத்தொகுதியில் இது வரை திமுக, அதிமுக தலா( 2021 தோ்தல் வரை) 5 முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்பேரவைத் தொகுதியில் தோ்ந்தெடுக்கப் பட்ட செல்லப் பாண்டியன் சபாநாயகராகவும் ஆலடி அருணா மற்றும் அவரது மகள் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோா் அமைச்சா்களாகவும் இருந்துள்ளனா்.

பெரும்பாலான வருடங்களில் ஆளுங்கட்சி உறுப்பினரே இங்கு வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2016 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் பூங்கோதை ஆலடி அருணா வெற்றி பெற்றாா். ஆனால், அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தற்போதைய தோ்தலில் அதிமுக சாா்பில் பால் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளாா். திமுக ஆட்சியைப் பிடித்துள்ளதால், அவா் எதிா்க்கட்சி வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT