தென்காசி

சங்கரன்கோவிலில் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

DIN

சங்கரன்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து நகா்ப்புறத்துக்கு மின்விநியோகம் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக திருவள்ளுவா் நகா், சாந்தி காம்ப்ளக்கஸ், அண்ணாநகா், பிரதான சாலையில் காந்தாரி அம்மன் கோயில் அருகே போன்ற பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து, அபாய நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT