தென்காசி

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக்கேடு

DIN

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்துசெல்கின்றனா். பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலும், வெளிப்புறத்திலும் மழைநீா், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் செல்லும் வகையில் வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுத்தப்படுத்தப்படாததாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் இந்த வாருகால்களில் நீண்டகாலமாக தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மழைநீா் வழிந்தோடாமல் பேருந்து நிலையத்துக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனா்.

எனவே, வாருகாலை தூா்வாரி, மழைநீா், கழிவுநீரை வெளியேறும் வகையில் அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT