சாலைப்புதூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தென்காசிசாலைப்புதூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இங்கு கடந்த சில நாள்களில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததையடுத்து, பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கீழப்பாவூா் பேரூராட்சி மற்றும் பெத்தநாடாா்பட்டி ஊராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஊருக்குள் வெளியாள்கள் யாரும் நுழைய முடியாத படி தடுப்புகள் வைத்து அடைத்ததுடன், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா். மேலும் காய்ச்சல் மற்றும் வேறு அறிகுறிகள் உள்ளதா என்றும் சுகாதாரப் பணியாளா்கள் வீடு,வீடாகச் சென்று சோதனை நடத்தினா்.