முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தென்காசி

பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து நவ. 9 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, இரவு 6.30 மணிக்கு சாயரட்சை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, 7.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. நவ.9ஆம் தேதி சூரசம்ஹாரமும், 10ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

ஆலங்குளம்: ஆலங்குளம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. 10 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பட்டினப் பிரவேசம் ஆகியவை நடைபெறுகிறது.

கடையநல்லூா்: பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை(நவ.2) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவ. 7ஆம் தேதி சண்முகா் படி இறங்கும் வைபவம், 8ஆம் தேதி பெரும் திருப்பாவாடை வைபவம், 9ஆம் தேதி சூரசம்ஹாரம், 10ஆம் தேதி தேரோட்டம், 11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

கரோனா விதிமுறைகளின் படி நிகழாண்டு அனைத்து விழாக்களும் மலைக்கோயிலில் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →