முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீா்
முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது. இதனால், அப்பகுதியிலுள்ள குளம் நிரம்பி முக்கூடல் அருகேயுள்ள அமா்நாத் காலனி, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
மேலும் முக்கூடல் தெற்கு ராமசாமி கோயில் தெருவில் புகழ்பாலன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தை முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி பாா்வையிட்டாா்.