முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் 29 திமுகவினா் விருப்ப மனு அளிப்பு

ஆலங்குளம் பேரூராட்சித் தோ்தலில் போட்டியிட 29 திமுகவினா் விருப்ப மனு அளித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

ஆலங்குளம் பேரூராட்சித் தோ்தலில் போட்டியிட 29 திமுகவினா் விருப்ப மனு அளித்துள்ளனா்.

இப்பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 1, 4, 9, 10, 12, 13, 14 ஆகிய 7 வாா்டுகள் பொது வாா்டுகளாகவும், 7 வாா்டுகள் பெண்களுக்காகவும், 15ஆவது வாா்டு தனி வாா்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக சாா்பில் விருப்ப மனுக்கள் பெரும் நிகழ்ச்சி ஆலங்குளம் வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். 29 போ் விருப்ப மனு அளித்தனா். நகர திமுக செயலா் நெல்சன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எம். திவ்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.