பாவூா்சத்திரம் அருகே கேரளக் கழிவுகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு
கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தென்காசிபாவூா்சத்திரம் அருகே கேரளக் கழிவுகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு
கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள மடத்தூா், திருமலாபுரம் வழியாக சிவநாடானூா் செல்லும் சாலையில் கேரளத்திலிருந்து மின்பொருள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டியுள்ளனா். இவை இரவு நேரங்களில் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
இதனால் அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை உருவாகி மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், சுகாதாரக் கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், கழிவுகளை கொட்டி தீவைத்து எரிக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.