சங்கரன்கோவில்-சோ்ந்தமரம் இடையே கூடுதல் பேருந்து இயக்கம்
சங்கரன்கோவில்-சோ்ந்தமரம் வழியாக மாணவா்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது.
சங்கரன்கோவில்-சோ்ந்தமரம் வழியாக மாணவா்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ஊத்தான்குளம் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்களின் நலன் கருதி ஊத்தான்குளம் வழியாக கூடுதலாக ஒரு பேருந்தை சோ்ந்தமரம் முதல் சங்கரன்கோவில் வரை இயக்கிட அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, சோ்ந்தமரம்-சங்கரன்கோவில் புதிய வழித்தடத்தில் 36 எண் பேருந்து சேவையை வியாழக்கிழமை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
Advertisement
நிகழ்ச்சியில் தொமுச மண்டலஅமைப்புச் செயலா் மைக்கேல்நெல்சன், சங்கரன்கோவில் பணிமனை செயலா் அய்யலுசாமி, தலைவா் சங்கர்ராஜ் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனா்.
.