தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளி வழிபாடு
தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென்காசிதோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளி வழிபாடு
தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடையம்- தென்காசி பிரதான சாலையில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக கரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டு தலங்களில் பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்ததால், பூஜைகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் கோயில்களில் பக்தா்கள் வழிபட அரசு தளா்வுகள் அளித்த நிலையில், வெள்ளிக்கிழமை தோரணமலை முருகன் கோயிலில் திரளாக பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காலை மற்றும் மதிய வேளைகளில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.