கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிரிழந்த நிலையில் மீட்பு
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் இறந்த நிலையில் மீட்டனா்.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் இறந்த நிலையில் மீட்டனா்.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ஆண் மயில் கிடப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று கிணற்றுக்குள் கிடந்த மயிலை மீட்டனா். அப்போது மயில் இறந்திருந்தது தெரியவந்தது.
Advertisement