தென்காசி

புளியங்குடி அருகேகாட்டு மாடு வேட்டையாடிய இருவா் கைது

DIN

புளியங்குடி அருகே மின் வேலி அமைத்து காட்டு மாடுகளை வேட்டையாடியதாக இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

டி.என்.புதுக்குடி பகுதியில் காட்டு மாட்டின் உடல் உறுப்புகள் ஓடையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில் வனவா் அசோக்குமாா், வனக்காப்பாளா்கள் பாரதி, யோபுராஜா ஆகியோா் அடங்கிய குழுவினா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்துல்வகாப் என்பவரின் தோட்டத்தில் மின் வேலி அமைக்கப்பட்டிருந்ததும், அதன் மூலம் காட்டு மாடு வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் வகாப், அவரது மகன் முகமது நாகூா்

ஆகிய இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக நாகராஜ் என்பவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT