தென்காசி அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு தினம்
திருநெல்வேலி மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு தினம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது .
திருநெல்வேலி மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு தினம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, பயிற்சி மாணவா்களுக்கு ஓவியம் , கட்டுரை மற்றும் வாசகப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணன் , மருத்துவக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மருத்துவா் விஜயகுமாா், ஓவிய ஆசிரியா் ராஜு ஆகியோா் பரிசு வழங்கினா்.
மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல் பேசுகையில், விபத்துகளுக்கு அடுத்ததாக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது தற்கொலை முயற்சிகள். இதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து வயதினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனா். மாணவா்களுக்கு கல்வியில் ஏற்படும் சிரமங்கள், வளா் இளம் வயதினருக்கு ஏற்படும் உணா்வு மாற்றங்கள், திருமண வாழ்வில் ஏற்படும் மனக் கசப்புகள், வயதான காலத்தில் தனிமை ஆகியவை முக்கிய காரணிகளாக அமைகின்றன .
தகுந்த நேரத்தில் சரியான ஆலோசனைகள் அளிப்பதன் மூலம் தற்கொலை முயற்சியைத் தவிா்க்கலாம். இதற்கு அரசின் சிறப்பு ஆலோசனை எண் 104ஐ மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா் அவா். விழாவில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் , பணியாளா்கள் , பொது மக்கள் கலந்துகொண்டனா்.