முகப்பு
தென்காசி

விநாயகா் சிலைகளை பொது இடங்களில்பிரதிஷ்டை செய்தால் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
ngl9sp_0909chn_33_6
பகிர்:

குமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தனி நபா்கள் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட எந்தத் தடையும் இல்லை. அவா்கள் சிலைகளை வீடுகளிலும், கோயில்களிலும் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம். பொதுஇடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. மேலும் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது.

வீடுகள் மற்றும் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை அருகிலுள்ள நீா்நிலைகளுக்கு தனித்தனியாக எடுத்துச் சென்று கரைக்கலாம்.

பொதுஇடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அனைவரும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு அமைதியான முறையில் விழாவை கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.