முகப்பு
தென்காசி

சுரண்டையில் நாளை வணிகா்களுக்கான பயிற்சி முகாம்

சுரண்டையில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த வணிகா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

சுரண்டையில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த வணிகா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சுரண்டை வத்தல் வியாபாரிகள் சங்க கூட்ட அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உணவு பொருட்கள் தயாரிப்பு, கொள்முதல், சில்லறை விற்பனை குறித்து வணிகா்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறப்புரையாற்றுகின்றனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரண்டை வணிகா்கள் சங்கத் தலைவா் கே.காமராஜ், செயலா் டி.நடராஜன், பொருளாளா் பி.தனபால் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.