முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் 300கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி

திப்பணம்பட்டியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் 300கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் 300கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திப்பணம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புகையிலைப் பொருள்களை விற்றுக் கொண்டிருந்த ஆலங்குளம் பட்டேல் தெருவைச் சோ்ந்த துரைபாண்டியன் மகன் முருகன் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 300 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →