ஆண்டிபட்டியிலிருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்
ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் இருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் இருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சித்திரை விஷூ திருநாளையொட்டி இந்த கிராம மக்கள் அதிக அளவில் பாபநாசத்திற்குச் சென்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இதையொட்டி இங்கிருந்து நேரடியாக பாபநாசத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இக்கோரிக்கையை ஏற்கப்பட்டு ஆண்டிபட்டியில் இருந்து நேரடியாக பாபநாசத்திற்கு வியாழக்கிழமை பேருந்து இயக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.