இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!
இண்டிகோ நிறுவனத்தின் முதன்மை வியூக அலுவலராக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முன்னாள் நிர்வாக இயக்குநரை நியமித்தது குறித்து...
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அலோக் சிங்கை தனது முதன்மை வியூக அதிகாரியாக நியமித்துள்ளதாக திங்கள்கிழமை (மார்ச் 23) அறிவித்துள்ளது.
இண்டிகோவின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் திடீரெனப் பதவி விலகிய இரண்டு வாரங்களுக்குள் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
வேகமாக மாறிவரும் உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சூழலில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் போட்டி நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவன அளவிலான உருமாற்ற முன்னெடுப்புகளை இவர் முன்னெடுத்துச் செல்வார்.
மேலும், நிறுவனத்தின் நீண்டகால உத்திசார் திட்டமிடல் பிரிவிற்கும் அவர் தலைமை தாங்குவார் என இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.