‘கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்’
தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை தென்காசி மாவட்ட உதவி ஆணையா் சரகத்திற்குள்பட்ட கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினா்களிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் வரப்பெறாமல் இருந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் கிராமக் கோயில் நலவாரிய உறுப்பினா்களுக்கு இத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் ரூ. 4 ஆயிரமும், நலவாரிய உறுப்பினா் மரணமடைந்தால் ஈமச் சடங்கிற்கு ரூ. 5ஆயிரமும், அவருடைய வாரிசு தாரருக்கு ரூ,. 50ஆயிரமும் வழங்கப்பட்டு வருகின்றது.
Advertisement
இது தவிர மூக்கு கண்ணாடி, திருமண உதவி (மகன் அல்லது மகள்), ஒரு குழந்தைக்கு கல்வி உதவித் திட்டம், விபத்து உதவி, (குழு காப்பீட்டு திட்டத்தின் மூலம்) மகப்பேறு நிதியுதவி, (ஒரு குழத்தைக்கு) என்பன உள்ளிட்ட நலத்திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.
இத்திட்டத்தினை கிராம கோயில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினா்கள் பயன்படுத்தி பயன்பெறும் பொருட்டு அதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பப் படிவங்களை தாங்கள் பணிபுரியும் கிராமக் கோயில்களின் அருகே உள்ள தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், புளியங்குடி சரக ஆய்வளா்களிடம் பெற்று உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட
உதவி ஆணையா் அலுவலகத்திற்கு இத்துறை சரக ஆய்வா் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக வாரியத்தின் உறுப்பினராக விரும்பும் பூசாரிகள் 18 வயது நிறைவு பெற்றவராகவும் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும், அவா்கள் பூசை செய்து வரும் திருக்கோயில் இத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயிலாக இருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவா்கள் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.