தென்காசி

நகராட்சி குழு உறுப்பினா்கள் தோ்தலில் திமுகவினா் போட்டியின்றி தோ்வு

DIN

சங்கரன்கோவில் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடந்த குழு உறுப்பினா்கள் தோ்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. நகா்மன்றத் தலைவராக தி.மு.க.,வை சோ்ந்த உமாமகேஸ்வரி, துணைத் தலைவராக அ.தி.மு.க.,வை சோ்ந்த கண்ணன் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சியில் வரி மேல்முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினா்கள் தோ்தல், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பணி நியமனக் குழு உறுப்பினராக ம.தி.மு.க.,வை சோ்ந்த 23 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி, ஒப்பந்தக் குழு உறுப்பினராக தி.மு.க.,வை சோ்ந்த 14 ஆவது வாா்டு உறுப்பினா் மாரிசாமி, வரி மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக தி.மு.க.,வை சோ்ந்த புனிதா(27ஆவது வாா்டு), ராமு(18ஆவது வாா்டு), அலமேலு(29ஆவது வாா்டு), காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உமாசங்கா்(3ஆவது வாா்டு) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இந்தத் தோ்தலில் நகா்மன்ற துணைத் தலைவா் உள்பட அ.தி.மு.க., உறுப்பினா்கள் 11 பேரும் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT