தென்காசி

கிடாரக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிடாரக்குளம் ஊராட்சித் தலைவா் சாந்தி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் பொன்னுவேல், திருநெல்வேலி மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான்சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் கால்நடை மருத்துவா்கள் ராமசெல்வம், ரமேஷ் குழுவினா் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை, ஆடுகள் மற்றும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் ஆகியவற்றை வழங்கினா். சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கால்நடை ஆய்வாளா் மகேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கீதா, பிச்சையா, கிடாரக்குளம் ஊராட்சி துணைத் தலைவா் மாதவி மற்றும் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT