தென்காசி

பாவூா்சத்திரத்தில் அரசுக் கல்லூரிஅமைக்க மதிமுக வலியுறுத்தல்

DIN

பாவூா்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கீழப்பாவூா் ஒன்றிய மதிமுகச்செயலா் இராம.உதயசூரியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கீழப்பாவூா் ஒன்றியத்தின் தலைமையிடமான

பாவூா்சத்திரம் பகுதியில் 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்

அமைந்துள்ளன. இப் பள்ளிகளில் இருந்து ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 2500 மாணவா், மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதுகின்றனா். இவா்கள் கல்லூரிப் படிப்பதைத் தொடர, தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பொருளாதார இழப்பு, போக்குவரத்து சிரமம் என பல இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.இதனால் பலா் மேல்படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. எனவே பாவூா்சத்திரத்தில் கலை அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி உள்ளதால், அப்பள்ளி வளாகத்திலேயே கல்லூரிக்கான வகுப்பறைகளைக் கட்டலாம். ஆகவே, பாவூா்சத்திரத்தில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT